Sunday, November 29, 2009

அம்மா

மழை அங்கியிருந்தும்
குடையும் வேண்டுமென்று
நான் அடம் பிடித்ததால்
மழையில் நனைந்து வந்தாள்
அம்மா...

நண்பன்


காதலித்தான் நண்பன்,
தூக்கத்தை தொலைத்தேன் நான்,
நள்ளிரவில் அலறும்
கைத்தொலைபேசி!

Saturday, November 28, 2009

அறிவிப்புப் பலகை


வழியில் ஒரு அறிவிப்புப் பலகை
புரியாத மொழியில் தெரியாத எழுத்தில்
ஆயிரம் பேர் கடந்து சென்றனர் நானுட்பட
சிலருக்கு எழுத்து தெரிந்தது மொழி புரியவில்லை
சிலருக்கு மொழி புரிந்தது எழுத்து தெரியவில்லை
சிலருக்கு இரண்டும் புரிந்தது தெரிந்தது
சிலருக்கோ எதுவுமே தெரியவில்லை
ஆனால் எனக்கு ஒன்று மட்டும் புரிந்தது
அதில் எதோ எழுதியிருக்கிறதென்று...

குடை



கையில் குடையில்லை
மழை விட்டு விடும் என்ற நம்பிக்கையில்
தெருவில் இறங்கிவிட்டேன்
நனையாமல் வீடு செல்ல.......

மழை


எப்போதாவது பள்ளிக்குப் போகும்
மாணவனை அன்றும் தடுத்து நிறுத்தியது
திடிரெனப் பெய்த மழை.