
வழியில் ஒரு அறிவிப்புப் பலகை
புரியாத மொழியில் தெரியாத எழுத்தில்
ஆயிரம் பேர் கடந்து சென்றனர் நானுட்பட
சிலருக்கு எழுத்து தெரிந்தது மொழி புரியவில்லை
சிலருக்கு மொழி புரிந்தது எழுத்து தெரியவில்லை
சிலருக்கு இரண்டும் புரிந்தது தெரிந்தது
சிலருக்கோ எதுவுமே தெரியவில்லை
ஆனால் எனக்கு ஒன்று மட்டும் புரிந்தது
அதில் எதோ எழுதியிருக்கிறதென்று...